மியூச்சுவல் ஃபண்ட் ரிஸ்க் எப்படி குறைப்பது?

மியூச்சுவல் ஃபண்ட் ரிஸ்க் எப்படி குறைப்பது?


மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ரொம்ப முக்கியம். ‘நம்மால் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும்?’ அப்படிங்கிறதைத் தெளிவாத் தீர்மானிப்பது..!

‘வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...’ 23 ம் புலி-கேசி படத்துல வடிவேலு சொல்வாரே... அதேதான்! அவர் காமெடிக்குச் சொல்வார்.
ஆனா, மியூச்சுவல் ஃபண்டுல நிஜமாகவே வரலாறு மிக முக்கியம். அதாவது ஒரு ஃபண்ட், கடந்த காலங்கள்ல நல்ல லாபம் தந்திருக்கானு பார்க்கணும். அதேமாதிரி அந்த குறிப்பிட்ட ஃபண்டை வழி நடத்திகிட்டு போற தளபதியான ஃபண்ட் மேனேஜர் அதுக்கு முன்னாடி நிர்வகிச்ச திட்டங்கள் நல்ல லாபம் கொடுத்திருக்கானும் பார்க்கணும். அந்த ஃபண்டுகள் லாபம் தந்திருந்தா, இப்போ நிர்வகிக்கிறதும் லாபம் கொடுக்கும்னு ஓரளவு நம்பலாம்.

இதைத் தவிர, நம்ம கிட்ட வசூலிக்கிற பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள் எந்த துறைப் பங்குகள்ல முதலீடு செய்யப்போறதாச் சொல்றாங்களோ, அந்தத் துறைக்கு எதிர்கால வளர்ச்சி இருக்குதானு பார்க்கிறதும் முக்கியம். நல்ல ஃபண்டைப் பற்றின விஷயங்கள் பத்திரிகை, டி.வி. இன்டர்நெட் எல்லாத்துலயும் ஏராளமா கிடைக்கும். அதையும் படிச்சு தெரிஞ்சுக்கிடலாம். கடைசியில நம்ம தேவைக்கு எது பொருந்துதோ அதை செலக்ட் செய்யறதுதான் புத்திசாலித்தனம்.

இதுபோக ஆஃபர் டாக்குமென்ட் என்கிற வழங்குப் பத்திரத்திலும் நிறைய தகவல்கள் இருக்கும். புதிய ஃபண்டில் முதலீடு செய்யும்போது இந்த வழங்குப் பத்திரம் கொடுப்பாங்க. அதையும் கவனமாப் படிச்சிடணும்.