80C பிரிவை தாண்டி உங்கள் வரியை சேமிக்கும் 7 சிறந்த வழிகள்

80C பிரிவை தாண்டி உங்கள் வரியை சேமிக்கும் 7 சிறந்த வழிகள்
7 Best Tax Saving Options Other Than 80C



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

வரிகளைப் பற்றித் திட்டமிடும் முன்பு, உங்களின் மொத்த வருமானம் மற்றும் வரிவிதிப்புகள் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதன் மூலம் திறமையாக வரியை சேமிக்க முடியும். தனிநபர்கள் சிறப்பான முதலீடுகள் செய்வதுடன் அதன் மூலம் வரியையும் சேமிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களைத் தருகின்றது. பெரும்பாலும் வரி திட்டமிடலின் போது 80C பிரிவின் கீழ் கிடைக்கும் வரிச் சலுகைகளைத் தான் அனைவரும் பயன்படுத்துவார்கள். சிறப்பாக வரியை சேமிக்க 80C பிரிவை தவிர 7 சிறந்த வரிச் சேமிப்புத் திட்டங்களை இங்கே காணலாம்.

தேசிய ஓய்வூதியத் திட்டம் இந்திய அரசு தனிநபர்களுக்காக மே2009ல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ஆரம்பித்தது. இதன் கீழ், ஒவ்வொரு சந்தாதாரரும் நிரந்தர ஓய்வு கணக்கு எண் (Permanent Retirement Account Number -PRAN) மூலம் மத்திய பதிவாளர் அலுவலகத்தில் (Central Recordkeeping Agency) கணக்கு துவங்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரையிலான முதலீடுகளுக்குக் கூடுதல் வரிச்சலுகைகளை 80CCD (1B) பிரிவின் கீழ் பெறலாம். இதை வரிமானவரிச்சட்டம் 1961 ன் பிரிவு 80C ன் விலக்கு பெறும் ரூ1.5 லட்சத்திற்குப் பிறகு பெறலாம். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் நீங்கள் தேர்வு செய்யும் முதலீட்டு வகையைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக அதிக ஆபத்துள்ள பங்குகள் அல்லது பெருநிறுவன கடன் அல்லது அரசாங்க கடன் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.

ராஜீவ்காந்தி பங்கு சேமிப்புத் திட்டம் (பிரிவு 80CG) இத்திட்டத்தின் கீழ் தனிநபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பங்குகளில் ரூ50,000 வரை முதலீடு செய்யலாம். இதற்காக வரிச்சலுகைகள் பிரிவு80GC ன் கீழ் வழங்கப்படும் நிலையில், முதல்முறை முதலீட்டாளர்கள் மட்டுமே வரிச்சலுகைக்காக இதில் முதலீடு செய்யமுடியும். இத்திட்டம் முந்தைய ஐ.மு.கூ அரசால் துவங்கப்பட்டது என்பதால் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. மறுசீரமைக்கப்பட்டுத் தொடக்க அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் இந்தத் திட்டம் பங்குச்சந்தையுடன் தொடர்புடையது என்பதால் சற்று ஆபத்தானது.

கல்விக்கடன் மீதான வட்டி (பிரிவு 80E) கல்விக்கடனுக்கான வட்டியின் மீது மட்டுமே வரிச்சலுகைகள் தரப்படுகின்றன. கல்விக்கடனின் தவணைத்தொகைக்கு அல்ல. எனவே வரி தாக்கலின் போது கடனுக்காகச் செலுத்திய வட்டிக்கு மட்டுமே வரிச்சலுகை கோரலாம். பிரிவு80c ன் கீழ் விலக்கு பெற்றதுக்கு மேலாக இந்தப் பிரிவில் விலக்குப் பெறலாம். மேலும் பிரிவு 80Eல் அதிகபட்சத்தொகை எதுவும் கிடையாது. பெரும்பாலும் இத்திட்டத்தைப் பற்றி யாரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இதைப்பற்றியும் பலன்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

வீட்டுவாடகைப் படி (பிரிவு 80GG) நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பு அல்லது வாடகைவீட்டில் வசித்து, வாடகை செலுத்திவருவதாக இருந்தால், வருமானவரிச் சட்டம் பிரிவு 80GGன் கீழ் வரிவிலக்குக் கோரலாம். நீங்கள் வசிக்கும் நகரத்தைப் பொறுத்து வரிவிலக்கு அளிக்கும் தொகை நிர்ணயிக்கப்படும். சில நகரங்களில் அதிகரித்துவரும் வாடகைக்கு ஏற்றவாறு இது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றாலும், இன்னும் அது செய்யப்படவில்லை. இதைப்பற்றிய முழு விவரங்கள் உங்கள் நிறுவனத்திடம் பெறமுடியாது என்பதால், மனிதவளத்துறையை அணுகிப் பெறலாம்.

வீட்டுக்கடன்கள் கடந்த மத்திய நிதிநிலை அறிக்கையின் போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பிரிவு 24 ன் கீழ் வீட்டுகடன் வட்டிக்கான வரிவிலக்கை ரூ1.5 லட்சத்திலிருந்து 2லட்சமாக உயர்த்தினார். 2016-17 நிதியாண்டில் இருந்து கூடுதலாக ரூ50,000க்குப் பிரிவு 80EE ன் கீழ் வரிச்சலுகை கோரலாம். ஆனாலும் இதற்குக் குறிப்பிட்ட விதிமுறைகளைப் பூர்த்திச் செய்திருக்க வேண்டும். வீட்டுக்கடன் முதலின் தவணைத்தொகைக்கான பலன்கள் எப்போதும் போல் பிரிவு 80Cன் கீழ் கிடைக்கும். இது 1லடசத்திலிருந்து 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீடு (பிரிவு 80D) தனிநபர்கள் மருத்துவகாப்பீடு எடுப்பதன் மூலம் ரூ25,000 வரிவிலக்குப் பெறமுடியும். இதுவே மூத்தகுடி மக்களுக்கு ரூ30,000. மருத்துவகாப்பீடு எடுக்கும் இதுவும் பிரிவு 80C கீழ் தான் வருகிறது. ஆனால் 80Cன் கீழ் கிடைக்கும் பலன்கள் மூலம் உடல்நல பரிசோதனைகள் கூடச் செய்துகொள்ளமுடியும்.

நன்கொடைகள் (பிரிவு 80G) வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 80G ன் கீழ் என்.ஐ.ஓக்களுக்கு வழங்குப்படும் நன்கொடைகளுக்கும் வரிவிலக்குப் பெறமுடியும். ஆனால் அத்தொகையைப் பணமாக அல்லது வரைவோலையாகத் தரும்போது மட்டுமே விலக்கு கோர முடியும். 50% அல்லது 100% நன்கொடைக்கு விலக்கு அளிக்கப்படும். வருமானவரி தாக்கலின் போது நன்கொடை பெற்ற நிறுவனத்தின் ஃபான் எண்ணை குறிப்பிடுவது கட்டாயம். நீங்கள் நன்கொடை வழங்கத்தக்க அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் முழுப்பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவச் சிகிச்சைகள் (பிரிவு 80DDB) வருமானவரிச்சட்டத்தின் பிரிவு 80DDB ன் கீழ், குறிப்பிட்ட சில நோய்களின் மருத்துவத்திற்குச் செலவிடும் தொகைக்கு வரிச்சலுகைகள் கிடைக்கும். வரித்தாக்கல் செய்யும் தனிநபர்களுக்கு மட்டுமின்றி அவர்களைச் சார்ந்துள்ளவர்களின் மருத்துவச் செலவுகளுக்கும் வரிவிலக்குக் கோரலாம். ஆனால் இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் இந்த வரிவிலக்கை பெற இயலாது. ஒரு வேளை இந்து கூட்டுக்குடும்பமாக இருந்தால் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் வரிவிலக்குக் கோரலாம்.

பிரிவு 80C என்றால் என்ன? வருமானவரிச் சட்டம்1961 ன் இந்தப் பிரிவில் குறிப்பிட்டுள்ள பிரிவுகள்/ முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் வரிவிலக்குப் பெறமுடியும். இதில் அதிகபட்சமாக ரூ1,50,000 வரை வரிவிலக்குப் பெறலாம். 80C பிரிவின் கீழ் பங்குகளுடன் இணைந்த முதலீட்டுத் திட்டம், பொது வருங்கால வைப்புநிதி எனப் பல திட்டங்கள் உள்ளன. 80C பிரிவின் கீழ் வரிவிலக்கு பெறும் முதலீட்டுத் திட்டங்களை அனைவரும் அறிவர் என்பதால், அதைத் தவிர்த்து பிற சிறந்த முதலீட்டுத் திட்டங்களை இங்கே வழங்கியுள்ளோம்.