மியூச்சுவல் ஃபண்ட் வகை : குளோபல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் வகை : குளோபல் ஃபண்ட்..!


உள்ளூர் மைதானத்தில் மட்டுமில்லை. உலக மைதானத்திலும் அடித்து விளையாட நினைக்கும் கில்லி ஃபண்ட் இது! இந்தியச் சந்தையில் மட்டுமில்லாம உலகப் பங்குச் சந்தைகள்லயும் கலந்து முதலீடு செய்யறதுதான் குளோபல் ஃபண்ட்.

ரிஸ்க்கைக் குறைக்கிறதும், உலகின் சிறந்த பங்குச் சந்தைகள்ல அறுவடை நடத்தி லாபம் பார்க்கிறதும்தான் இந்த ஃபண்ட்டோட நோக்கம். இந்தியச் சந்தைகள்ல 65%, மற்ற நாட்டு சந்தைகள்ல 35%, அல்லது பாதிக்குப் பாதி, அல்லது 100% முதலீடும் வெளிநாடுகளுக்கு... என்பது மாதிரி, பல டைப்புகள்ல முதலீடு செய்யறாங்க.

குளோபல் ஃபண்டுகளைப் பொறுத்த-வரைக்கும் முதலீட்டுக்கு வரிச் சலுகை எதுவும் கிடையாது. ஆனா, வருமானத்துக்கு வரிச் சலுகை (விதிமுறைக்கு உட்பட்டு) இருக்கும். பொதுவாக, இந்த ஃபண்டுகள்ல போட்ட முதலீட்டை ஓராண்டுக்குள்ள திரும்ப எடுத்தால், குறுகியகால மூலதன ஆதாய வரி கட்டி-யாகணும்.

ஒரு வருஷத்துக்கு மேற்பட்ட முதலீடுன்னா, நீண்டகால ஆதாய வரி 10% விதிக்கப்-படும்.

நாம ஏற்கெனவே பார்த்த மாதிரி சில குளோபல் ஃபண்டுகள்ல அவங்க திரட்டின நிதியில 65% இந்தியச் சந்தையிலயும், மீதியை சர்வதேச சந்தையிலயும் முதலீடு செய்ய-றாங்க. இந்த மாதிரி ஃபண்டுகளை ஈக்-விட்டி ஃபண்டுகளாக எடுத்துக்-கிட்டு அதுக்-கேத்தபடி வரி விதிக்கறாங்க. (ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு குறுகியகால மூலதன ஆதாய வரி 15%, நீண்டகால மூலதன ஆதாய வரி 0%). அதனால் இந்த வகை குளோபல் ஃபண்டுகளில் துணிந்து முதலீடு செய்தால் ரிஸ்க்கை குறைத்து, வரியையும் மிச்சப்-படுத்-தலாம். ஒரு கல்.. இரண்டு மாங்காய்.

யாருக்கு ஏற்றது?:

பங்குச் சந்தை அபாயங்களைக் குறைக்க நினைப்பவர்களுக்கு.