பிபிஎஃப் -(Public Provident Fund) ஒரு நாளுக்கு ரூ.3,300 வட்டி - வரி விலக்கு உண்டு

பிபிஎஃப்  -(Public Provident Fund)  ஒரு நாளுக்கு ரூ.3,300 வட்டி  -  வரி விலக்கு  உண்டு


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


கோடீஸ்வரன் ஆகுறது இருக்கட்டும், ஒரு நாளுக்கு ரூ.3,300 வட்டி வேணுமா? அப்ப மாசத்துக்கு, வருஷத்துக்கு.?

இது பங்குச் சந்தைகள் திட்டமோ, இன்ஷூரன்ஸின் யூலிப் திட்டமோ இல்லை. இது முழுக்க முழுக்க ரிஸ்கே இல்லாத ஜாலியான திட்டம். ஒழுங்காக வருமான வரிக்குப் போகும் காசை ஒதுக்கி முதலீடு செய்தால் போதும். அது தான் பிபிஎஃப் Public Provident Fund. இந்த திட்டத்தில் இருந்து மாதம் ஒரு நாளைக்கு இவ்வளவு வட்டி கிடைக்குமா..? என்றால் கிடைக்கும். மேற் கொண்டு படியுங்கள்

பிபிஎஃப் அரசு ஊழியர்களுக்கும், தனியார் ஊழியர்களுக்கும் ஏற்கனவே பிஎஃப் பிடிக்கப்படும். ஆனால் அப்படி பிடித்தம் செய்யாமல் முழு சம்பளத்தையும் கொடுக்கும் நிறுவனங்களை பார்க்கிறோம். இப்படி எந்த பாகுபாடும் இன்றி, யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

நீண்டகால திட்டம் பொதுமக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட பி.பி.எப், ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டம். இதில் எந்த ரிஸ்க்கும் இருக்காது அரசு ஊழியர்களின் புராவிடண்ட் பண்டுக்கு இணையாக தற்போது 8 விழுக்காடு வட்டி வழங்கப்படுகிறது.

எப்படி முதலீடு செய்வது ஒரே தவனையில் முழு தொகையையோ அல்லது அதிகபட்சம் 12 தவனைகளாகவோ பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்படும் தற்போது பிபிஎஃப் கணக்குகளுக்கான வட்டி ஆண்டுக்கு 8 சதவிகிதமாக இருக்கிறது.

கால அளவு இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் 15 வருடங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். அப்படி முடியாதவர்கள், ஐந்து ஆண்டுகள் முடிவில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறையாவது முதலீடு செய்ய வேண்டும்.

வரி விலக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-ன் கீழ் ஆண்டுக்கு அதிகபட்சமாக 1,50,000 ரூபாய் வரை பிபிஎஃப் திட்டத்தில் முதலீடுச் செய்யும் தொகைக்கு வரிக் கழிவு பெறலாம். அதாவது 1,50,000 ரூபாய் வரை பிபிஎஃப் திட்டத்தில் செய்யும் முதலீட்டுக்கு வருமான வரி கட்டத் தேவை இல்லை.

வருமானத்தில் வரி விலக்கு இந்த பிபிஎஃப் முதலீட்டுத் தொகைக்கு கிடைக்கும் வட்டி வருமானமோ அல்லது குறிப்பிட ஆண்டுகளுக்குப் பிறகு செய்த முதலீட்டுத் தொகை + கிடைத்த வட்டி வருமான் என எதை எடுத்தாலும் வருமான வரி விலக்கு உண்டு. Withdrawal ஒருவர் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்கிறார் என்றால் அவருடைய மெச்சூரிட்டி காலமான 15 வருடங்கள் வரை காத்திருக்கலாம். அல்லது ஐந்து வருடங்கள் கழித்து பிபிஎஃப் கணக்கை குளோஸ் செய்துவிட்டு அசல் மற்றும் வட்டியோடு முழு தொகையை எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஐந்து வருடங்கள் கழித்து அசல் மற்றும் வட்டியில் 50 % தொகையை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். வட்டி குட்டிபோடும் வட்டிக்கு வட்டி கணக்கு போட்டு கடன் கட்டுபவர்கள் தானே நாம். ஆனால் வெகு சிலர் மட்டும் இந்த வட்டி குட்டி கணக்கை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வட்டிக் கணக்குகளை  பாருங்கள்:

அட்டவனை விளக்கம்: ஆண்டுக்கு 1,50,000 ரூபாய் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், எட்டாவது ஆண்டில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வட்டியாகக் கிடைக்கும். இந்த வட்டியையும் நீங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. பிபிஎஃப் கணக்கிலேயே தங்கி இருக்கிறது என்றால், 24-வது ஆண்டில் இருந்து மாதம் 50,000 ரூபாய் வட்டியாகக் கிடைக்கும். அட அதுவும் வேண்டாங்க என பணத்தை எடுக்காமல் இருக்கிறீர்கள் என்றால்..?

மாசம் ஒரு லட்சம் தலைப்பில் சொன்னது போல 34-வது ஆண்டில் இருந்து மாதம் ஒரு லட்சம் ரூபாய் வட்டியாக மட்டும் வரும். இது போக உங்கள் கையில் 1,50,69,497 ரூபாய் அசல் தொகை வேறு இருக்கும். இப்ப நீங்க ஒரு கோடீஸ்வரன் + மாசம் ஒரு லட்சம் வட்டி மட்டும் சம்பாதிக்கிற பெரிய தலக்கட்டு தான்.

தம்பி வருமான வரி முன்பே சொன்னது போல பிபிஎஃப் கணக்கில் இருந்து எடுக்கப்படும் அசல் தொகை அல்லது வட்டி தொகை அல்லது மெச்சூரிட்டி தொகை என அனைத்துக்கும் 100 % வருமான வரி விலக்கு உண்டு.