மொபைல் போன் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

 மொபைல் போன் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
How to apply passport Through mobile app using mpassportseva app


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவதில் உள்ள சிக்கலான நடைமுறையினை ஒழிக்கும் விதமாக வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய்க்கிழமை mPassportSeva என்ற செயலியினை அறிமுகம் செய்துள்ளார். இந்தச் செயலி மூலம் இந்தியாவின் எந்த ஒரு மூலையில் இருந்தும் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கலாம். 2013-ம் ஆண்டே இந்த mPassportSeva செயலி அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் அதில் தேவையான பல முக்கிய அம்சங்கள் இல்லை. புதிய வெஷனில் பல முக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

புதிய mPassportSeva செயலி 2018 ஜூன் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய mPassportSeva செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் என இரண்டிலும் கிடைக்கிறது. இன்னும் விண்டோஸ் போன் பயனர்களுக்கு இந்தச் செயலி தயாராகவில்லை. அதே நேரல் போலி செயலிகளில் இருந்து கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

புதிய mPassportSeva செயலியில் என்னவெல்லாம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன? 2013-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட mPassportSeva செயலியில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தினை டிராக் செய்வது மற்றும் விண்ணப்பம் குறித்த விதிமுறைகளைப் பெறுவது போன்றவை மட்டுமே இருந்த வந்த நிலையில் புதுப்பிக்கப்பட்ட mPassportSeva செயலி 3.0-ல் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் என்பது முக்கிய வசதியாகும். அதுமட்டும் இல்லாமல் செயலியில் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் கட்டணத்தினையும் செலுத்தலாம்.

ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கான சேவைகள் ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் அதனைப் புதுப்பிக்க, தனிநபர் விவரங்களைத் திருத்த, தொலைந்து விட்டால் புதிய பாஸ்போர்ட் பெற கூடிய வசதிகள் எல்லாம் புதிய செயலியில் வழங்கப்பட்டுள்ளது. காவல் துறை சரிபார்ப்பு மற்றும் பின்னணி சோதனை வசதிகளும் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

mPassportSeva செயலி மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பது எப்படி? mPassportSeva செயலியில் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பதும், ஆன்லைனில் விண்ணப்பிப்பது ஒரு மாதிரியாகத் தான் இருக்கும். கூடுதலாகவோ, குறைவாகவோ எந்த வசதியும் இருக்காது.

பதிவு செய்தல் mPassportSeva செயலியினை மொபைலில் பதிவிறக்கம் செய்த பிறகு புதிய பயனர் பதிவு என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

பாஸ்போர்ட் அலுவலகம் பின்னர்ப் பாஸ்போர்ட் அலுவலகத்தினைத் தேர்வு செய்ய வேண்டும். பாஸ்போர்ட் அலுவலகத்தினைத் தேர்வு செய்யும்போது உங்களிடம் உள்ள அரசு வழங்கிய ஆவணங்கள் எல்லாம் அந்த நகரத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஒருவேலை உங்களது நகரத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் இல்லை என்றால் அதன் அருகில் எந்த நகரத்தில் உள்ளது என்பதைப் பார்த்துத் தேர்வு செய்யலாம்

முக்கியமான விவரங்கள் பேயர், மின்னஞ்சல் முகவர், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களைப் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் போது சரியாக அளிக்க வேண்டும்

பயனர் பெயர் செயலிக்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் போது எப்படித் தேர்வு செய்வோமோ அதே போன்று பயனர் பெயரை உருவாக்க வேண்டும். கடவுச்சொல்லும் உருவாக்க வேண்டும்.

பாதுகாப்புக் கேள்விகள் செயலியினைக் கடவுச்சொல் மறந்துவிட்டால் அதனைத் திரும்பப் பெற கூடிய வகையில் பாதுகாப்புக் கேள்விகள் மற்றும் அதற்கான பதிகளையும் அளிக்க வேண்டும்.

கேப்ட்சா குறியீடு நீங்கள் கணினி இல்லை, மனிதர் தான் என்பதை உறுதி செய்யக் கேப்ட்சா குறியீடு உள்ளிட்டு விண்ணப்பத்தினைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மின்னஞ்சல் பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குச் சரிபார்ப்பு இணைப்பு ஒன்று அனுப்பப்படும். அதனைக் கிளிக் செய்து பாஸ்போர்ட் இணையதளத்திற்குச் சென்று உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் இரண்டையும் அளித்து உள்நுழைய வேண்டும்.

சரிபார்ப்புப் பணிகள் சரிபார்ப்புப் பணிகள் எல்லாம் முடிந்த பிறகு மீண்டும் mPassportSeva செயலிக்குச் சென்று ஏற்கனவே பதிவு செய்த பயனர் என்பதைத் தேர்வு செய்து கேப்ட்சா குறியீட்டை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும்.

புதிய பாஸ்போர்ட் பின்னர்ப் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பம் என்பதைத் தேர்வு செய்து,அ தார் எண், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமை போன்ற தேவையான விவரங்களைப் பூர்த்திச் செய்து விண்ணப்பத்தினைச் சமர்ப்பிக்க வேண்டும்.

டிராக்கிங் குறியீடு விண்ணப்பத்தினை வெற்றிகரமான சமர்ப்பித்த பிறகு உங்களுக்கு ஒரு குறியீடு வழங்கப்படும். அதனைப் பயன்படுத்தி உங்கள் விண்ணப்பத்தின் நிலையினை எளிதாக டிராக் செய்யலாம்.

பணி ஓய்வுக்குப் பிறகு வீடு வாங்க வேண்டுமா?

பணி ஓய்வுக்குப் பிறகு வீடு வாங்க வேண்டுமா?
How to save money when buying home after retirement


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

உங்களின் நண்பர்கள் சொத்துக்களில் முதலீடு செய்யும் போது நீங்கள் வேறு பிரச்சனைகளைக் கையாண்டுகொண்டு இருந்திருக்கலாம். உங்களுக்கான பொறுப்புகள் வேறாக இருந்திருக்கலாம். எது எப்படியிருந்தாலும், தற்போது நீங்கள் ஓய்வு பெற்றுவிட்டதால் கண்டிப்பாக உங்களுக்கு வீடு தேவை. ஆனால் பணத்தைத் திரட்டுவது மிகவும் கடினமாக உள்ளது மற்றும் சொத்துக்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

பல்வேறு வழிகளில் பணத்தைச் சேமிப்பதன் வாயிலாக உங்களின் பட்ஜெட்டுக்கு உள்ளேயே உங்கள் கனவு இல்லத்தை நிஜமாக்க முடியும். பணிஓய்விற்குப் பிறகான கனவு இல்லத்திற்குத் திட்டமிடும் போது, உங்களால் பணத்தை மேலாண்மை செய்ய முடியும் வழிகளின் பட்டியல் இதோ..

அளவு

பொதுவாகப் பணி ஓய்விற்குப் பிறகான இல்லத்தில் நீங்களும், உங்களின் வாழ்க்கைத் துணையும் என இருவர் மட்டுமே இருப்பீர்கள். இதனால் தனது சிறிய அளவிலான இல்லம் பரிந்துரைக்கப்படுகிறது. சிறிய அளவிலான சொத்திற்குக் குறைவான பணம் செலுத்தினால் போதும் என்பதால் உங்கள் பட்ஜெட்டும் குறையும். அதுமட்டுமின்றிப் பெரிய வீட்டை ஒப்பிடும் போது, சிறிய வீட்டைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவும் குறைவு.

இடம் நீங்கள் சொத்து வாங்கும் இடம் தான் அதன் விலையை நிர்ணயிக்கிறது. மூத்த குடிமக்கள், எப்போதும் பரபரப்பாக இருக்கும் நகரத்து வாழ்க்கையை விட்டு சற்று தள்ளி இருப்பது தான் நல்லது. இது இரண்டு வழிகளில் நன்மை அளிகக்கூடியது. நகரத்தின் மையப் பகுதியில் உள்ள சொத்தைக் காட்டிலும், இந்தச் சொத்துக்கள் விலை மலிவாகக் கிடைக்கும் மற்றும் சுகாதாரமான சுற்றுப்புறச் சூழலையும் தரும். நீங்கள் வாங்கவுள்ள சொத்து மூத்த குடிமக்களுக்கான அனைத்து வசதிகளையும் தரும் திட்டமாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இதர செலவுகள் புறநகர் பகுதியில் வீடு வாங்குவது ஆர்வமுள்ள ஒன்றாக இருந்தாலும், நீங்கள் அடிக்கடி நகரத்திற்குச் சென்று வரும் தேவை இருந்தால் புறநகரில் வசிப்தும் அதிகச் செலவுகளை ஏற்படுத்தும். இது போன்ற வேறு சில காரணிகளும் உங்களின் வீடு வாங்கும் ஒட்டுமொத்த தொகையையும் உயர்த்திவிடும். எனவே வீடு தேடத்துவங்குவதற்கு முன்பு, உங்களின் தேவைகள் என்னென்ன என்பதை நன்கு ஆராய்ந்து, உங்களால் முடிந்த அளவிற்குப் பணத்தைச் சேமியுங்கள்.

இந்தியாவில் ஜாய்ன்ட் அக்கவுண்டால்( Joint Account) ஏற்படும் முக்கியப் பிரச்சனைகள்

இந்தியாவில் ஜாய்ன்ட் அக்கவுண்டால்( Joint Account) ஏற்படும் முக்கியப் பிரச்சனைகள்               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி ஜாய்ண்ட் அக்கவுண்ட் எனப்படும் கூட்டு வங்கிக் கணக்குகளைப் பொதுவாகத் திருமணமான ஜோடிகள், நெருங்கிய உறவினர்கள், தொழில் கூட்டாளிகள், நெருக்கமானவர்கள் அல்லது பணத்தை மேலாண்மை செய்யும் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் தனிநபர்கள் மத்தியில் துவங்குகின்றனர்.

இவ்வகைக் கணக்குகளில், கணக்கை துவங்கும்போது ஒப்புக்கொண்ட படி, அதில் உள்ள அனைத்து தரப்பினரும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அங்கீகாரம் மற்றும் அதிகாரம் பெற்றவர்கள். கூட்டு வங்கி கணக்கை வைத்திருக்கும் போது அதன் அனைத்து கணக்குதரார்களுக்கும் இடையே நம்பிக்கை மிக முக்கியம். நிகழ்காலத்தில் இந்தக் கூட்டு கணக்குகளால் சந்திக்கும் சில ஆபத்துக்களைப் பற்றி இங்கே காணலாம்.

1) விவாகரத்தின் போது பிரச்சனை கூட்டுக் கணக்குகள் விவாகரத்தின் போது பிரச்சனையாக வெடிக்கக் கூடியது.ஏனெனில் இதில் உள்ள பணத்தை இரு நபர்களுக்கு இடையே பிரிப்பது கடினமாக இருக்கலாம். சிலருக்கு தங்களின் வருவாய் மற்றும் செலவுகள் பற்றிய தகவலை பகிர்ந்துகொள்வது பிரச்சனையாக இருப்பதால், தனியுரிமையை இழுக்க நேரிடும்.

2) மோதல் வங்கிகணக்குகளைப் பகிர்ந்துகொள்வது மோதலுக்கு வழிவகுக்கும். உடன் வசிப்பவர், வாழ்க்கைத்துணை, தொழில் கூட்டாளிகள் என யாராக இருந்தாலும் கருத்து வேறுபாடுகள் எழும் என்பதால், பகிரும் வங்கிகணக்குகள் எதிர்காலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அனைத்து கணக்குதாரர்களும் எந்த நேரத்திலும் மற்றொருவரின் அனுமதியின்றிச் சரிசமமாகக் கணக்கை பயன்படுத்த முடியும், பணம் எடுக்க முடியும், பணம் போட முடியும், தகவல்களைத் திருத்த அல்லது பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்பதால் பிரச்சனை எழ வாய்ப்புள்ளது.

3) வரி விதிப்புகள் வரிவிதிப்பு என வரும் போது, வட்டி வருவாயை முதல் கணக்குதாரர் தாக்கல் செய்ய வேண்டும். இருவரும் சம்பளதாரர்களாக இருந்தால், வரி விதிப்புகள் முதல் கணக்குதாரருக்கு மட்டுமே பொருந்தும். நீங்கள் முதல் கணக்குதாரராக இருந்து, இரண்டாம் கணக்குதாரரான உங்கள் வாழ்க்கைத் துணை வருவாய் ஏதும் இல்லாமல் இருந்தால், உங்களுக்கு மட்டுமே வரிவிதிப்புகள் பொருந்தும். அந்தச் சூழ்நிலையில் வருமானம் இல்லாதவர்கள் அல்லது வரிவரம்பிற்குக் கீழ் உள்ளவர் முதல் கணக்கு கணக்குதாரராக இருக்க வேண்டும்.

4) நிதி தனியுரிமை குறைவு இதுபோன்ற கூட்டு கணக்குகளின் பாதுகாப்பு என்பது, உங்கள் உறவின் பாதுகாப்பை அதிகம் சார்ந்துள்ளது.நீங்கள் ஒரு கூட்டுக் கணக்கைத் துவங்கினால், உங்கள் கூட்டாளியுடன் அனைத்து நிதி சம்பந்தப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்வது மட்டுமில்லாமல் , பணத்தையும் அணுக அனுமதிக்கிறீர்கள். மேலும் இருவரும், மற்றொருவர் எவ்வளவு சம்பாதிக்கிறார், எவ்வளவு மற்றும் எதில் செலவழிக்கிறார், நிதி பழக்கவழக்கங்கள் என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும். இது உங்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலும், நிதி தனியுரிமை வேண்டுமெனில் தனிக் கணக்குகளைப் பராமரிக்க வேண்டும் அல்லது தனி மற்றும் கூட்டு கணக்குகளைத் தனித்தனியே பராமரிக்கலாம். உறவுமுறை சரியில்லாமல் இருந்து இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், உங்களைப் பற்றிய அனைத்து நிதி ரகசியங்களும் கூட்டாளிக்கும் தெரிந்திருக்கும் என்பதால், நிதி சார்ந்த பிரச்சனைகள் எழலாம். பங்குதாரர்கள் இருவரும் தனித்தனியாகப் பிரிய முடிவெடுத்து, கூட்டு வங்கிக் கணக்கு இருவரின் பெயரிலும் இருந்தால், அந்தக் கணக்கை மூடலாமா அல்லது என்ன செய்யலாம் என்பதை இருவரும் சேர்ந்து ஒப்பந்தம் செய்யவேண்டும். கணக்கை மூட முடிவு செய்தால், வங்கியைத் தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மேலும் நேரடி கடன் அல்லது நிலுவை உத்தரவுகள் இருந்தால் அவற்றை நீக்கலாம் அல்லது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ளலாம். கூட்டுக் கணக்குதாரர்களில் ஒருவர் இறந்துவிட்டால், கணக்கில் உள்ள இருப்புத் தொகை மற்றொரு கணக்குதாரருக்கு சென்று விடும், பின்னர் அவர் மட்டுமே தனியாக வங்கிக் கணக்கை கையாளலாம்.

5) கடன் வரலாற்றில் தாக்கம் கணக்குதாரர் மோசமான கடன் வரலாற்றை வைத்திருந்தால், அது அவரின் கூட்டாளிக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கூட்டுக்கணக்கை வைத்திருப்பது பொதுவாத நல்ல யோசனையாக இருந்தாலும், கூட்டாளியால் உங்களின் அனுமதியின்றிப் பணத்தை எடுக்க முடியும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.இந்தக் காரணத்தால் தான் திருமணமான ஜோடிகளுக்குக் கூட்டுக் கணக்குகள் பொருத்தமானதாக இருக்காது.

வங்கி லாக்கர்(Bank Locker) கணக்கை திறக்கும் முன்னர்க் கவனிக்கவேண்டிய 5 விஷயங்கள்

வங்கி லாக்கர்(Bank Locker) கணக்கை திறக்கும் முன்னர்க் கவனிக்கவேண்டிய 5 விஷயங்கள்               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


இன்றைய சூழலில், நாம் அனைவரும் வேலைக்காக ஒரு புதிய நகரத்திற்குச் செல்கின்றோம். அல்லது, அடிக்கடி, பல்வேறு நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்கின்றோம். ஒரு சில அதிர்ஷ்டசாலி நபர்களுக்கு மட்டுமே தான் பிறந்த ஊரில் வாழும் வாழ்க்கை அமைகின்றது. அவ்வாறு சொந்த ஊரில் தங்கும் நபர்களின் குடும்பமும் தனிக் குடும்பம் அல்லது மிகச் சிறிய குடும்பமாக அமைந்து விடுகின்றது. எனவே பெரும்பாலனான நபர்கள், தங்களுடைய விலை மதிப்பற்ற ஆபரணங்கள், மற்றும் பொருட்களைப் பாதுகாப்பதில் மிகவும் சிரமப்படுகின்றனர். வீட்டில் வயதான பெற்றோர் இருக்கும் இல்லங்களில், இந்த விலை உயர்ந்த பொருட்களே அவர்களுக்கு ஆபத்தாக மாறி விடும் சூழலும் இன்று நிலவுகின்றது. அதிலும் புதிதாகத் திருமணமான நபர்கள் படும் அவஸ்தைகளை நம்முடைய வார்த்தைகளினால் விவரிக்க இயலாது. மணப்பெண் கொண்டு வந்த விலை மதிப்பு மிக்க நகைகள் மற்றும் பல்வேறு பொருட்களைப் பாதுகாப்பது நிச்சயம் மிகவும் கடினமான செயல்தான். ஒரு சிலர் மிகுந்த மன தைரியத்துடன், தன்னுடைய விலை மதிப்பற்றப் பொருட்களை, தங்கள் வீட்டில் உள்ள பாதுகாப்புப் பெட்டகம் போன்றவற்றில் பாதுகாக்க முனைகின்றனர்.

பாதுகாப்புப் பெட்டகம் உங்களின் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்களுடைய வீடே பாதுகாப்பாக இல்லாத பொழுது, வீட்டில் உள்ள பாதுகாப்புப் பெட்டகம் மட்டும் பாதுகாப்பானதா? இந்தக் கேள்விக்குப் பதில் தேடும் முன்னர் ஒரு கணம் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை மனதில் நினைத்துப் பாருங்கள். உங்களுடைய பெற்றோர் எத்தனையோ கஷ்டப்பட்டுப் பாதுகாத்து வந்த நம்முடைய முன்னோர்களின் விலையுர்ந்த பொருட்களைப் பாதுகாத்து அடுத்தத் தலைமுறைக்குத் தரவேண்டிய கடமை நமக்கு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

புத்திசாலிகள் ஒரு சில அதி புத்திசாலிகள், நாங்கள் எங்களுடைய வீட்டிற்குக் காப்பீடு செய்துள்ளோம். எனவே விலையுர்ந்த பொருட்களின் பாதுகாப்பைப் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை எனக் கூறலாம். காப்பீடு என்பது இழந்த பொருட்களுக்கு உரிய இழப்பீட்டை மற்றுமே தரும். காப்பீடானது, பொருட்களுக்கு உரிய பாதுகாப்பை கண்டிப்பாகத் தராது. எனவே நாம் நம்முடைய பொருட்களைப் பாதுகாக்க ஒரு சிறந்த இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதை மிகவும் பாதுகாப்பான இடம்தான் லாக்கர் என அழைக்கப்படும் வங்கியின் பாதுகாப்புப் பெட்டகம். இது முற்றிலும் நம்பகமானது கிடையாது. ஏனெனில் வங்கிப் பெட்டகத்தில் உள்ள பொருட்களுக்கு அந்த வங்கி ஒரு பொழுதும் பொறுப்பேற்காது.

வங்கி கொள்ளை வங்கி கொள்ளை என்பது மிகவும் அரிதான சம்பவம் ஆகும். எனவே நம்முடைய விலை மதிப்பற்ற பொருட்களை நம்முடைய வீட்டில் வைத்துப் பாதுகாப்பதை விட வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருப்பது நல்லது. எனினும் புதிதாக வங்கிப் பெட்டக கணக்கை ஒருவர் தொடங்கும் முன்னர் ஒரு சில முக்கியமான விஷயங்களை மனதில் பதிய வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

1. வங்கித் தேர்வு: தேசியமயமாக்கப்பட்ட வங்கியைத் தேர்வு செய்யுமாறு பலர் அறிவுறுத்துகின்றார்கள். மேலும் சிலர் தனியார் வங்கிகளைத் தேர்வு செய்யுமாறு ஆலோசனை வழங்குவார்கள். இரண்டு வங்கிகளுமே சரியானது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. வங்கிகளைத் தேர்வு செய்யும் பொழுது அவர்கள் கடைப்பிடிக்கும் விதிமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும் சரிபார்க்கவும். உங்கள் தேவைகளுக்குப் பொருந்தி வரும் வங்கியைத் தேர்வு வெய்யவும். அதில் மிக முக்கியமானது உங்களுடைய பட்ஜெட்டிற்குப் பொருந்தி வரும் வங்கியைத் தேர்வு செய்யவும். ஏனெனில் ஒரு சில வங்கிகள் தங்களுடைய பாதுகாப்புப் பெட்டகங்களுக்கு மிக அதிகமான வாடகையை வசூலிக்கின்றன. ஒரு சில வங்கிகள் மிகக் குறைந்த அளவே வாடைகைய் வசூலிக்கின்றன. வாடகையில் வித்தியாசம் இருந்தாலும், பாதுகாப்பு அம்சத்தில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

2. பாதுகாப்பு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்: பெரும்பாலும் அனைத்து வங்கிகளும் தங்களுடையதற்போதைய வாடிக்கையாளருக்கு மட்டுமே பாதுகாப்பு பெட்டக சேவையை வழங்குகின்றன. எனவே, உங்களுக்குப் பாதுகாப்பு பெட்டக வசதி வேண்டுமெனில் ஒரு சேமிப்புக் கணக்கை அந்த வங்கிக் கிளையில் நீங்கள் கட்டாயம் திறக்க வேண்டும். இதன் மூலம் வங்கியிடம் உங்களைப் பற்றிய அனைத்து விபரங்களும் KYC படிவ வடிவத்தில் கிடைத்து விடும். முதன் முதலாகப் பாதுகாப்பு பெட்டக வசதியைப் பெறும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம் என்னவெனில், லாக்கரின் வாடகைக்கு ஈடாக வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களிடம் பாதுகாப்பு வைப்பு நிதியை வசூலிக்கும். எனவே அனைத்து வங்கிகளும், சேமிப்புக் கணக்குகளுடன் நிரந்தர வைப்பு நிதியை வலியுறுத்துகின்றனர். சில வங்கிகள் மிக அதிக அளவு தொகையை நிரந்தர வைப்பு நிதியாக வசூலிக்கின்றன. எனினும் ஒருவர் பாதுகாப்பு பெட்டகத்தின் மூன்று வருட வாடகையை மட்டும் நிரந்தர வைப்பு நிதியாகச் செய்தால் போதுமானது. இந்த மூன்று வருட பாதுகாப்பு நிதியானது, ஒருவேளை நீங்கள் பாதுகாப்பு பெட்டகத்தின் வாடகையைச் செலுத்த வில்லை எனில் வாடகையை வசூல் செய்யப் பயன்படும். எனவே வங்கியின் பாதுகாப்பு பெட்டக வசதியைப் பெறுவதற்கு விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்யும் முன்னர் அதில் உள்ள அனைத்து அம்சங்களையும் கவனமாகப் படித்துப் பார்க்கவும்.

3. பாதுகாப்புப் பெட்டகத்தில் எப்பொழுதும் ஒரு கண் வைத்திருங்கள்: நீங்கள் ஒரு லாக்கரைப் பெற்று அதில், விலையுயர்ந்த பொருட்களை வைத்து விட்டீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதோடு உங்களுடைய வேலை முடியவில்லை. ஒரு சீரான இடைவெளியில் உங்களுடைய பாதுகாப்புப் பெட்டகத்தைப் பார்வையிடுவது மிகவும் முக்கியம். சில வங்கிகள் 6 மாதங்களில் ஒரு முறை அல்லது ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் 15 முறை பாதுகாப்புப் பெட்டகத்தைப் பார்வையிடவேண்டும் என வலியுறுத்துகின்றன.

4. கணக்கு வகை: ஒரு சிறந்த மற்றும் சுமூகமான செயல்பாட்டுக்கு, பாதுகாப்புப் பெட்டகம் என்பது ஒரு கூட்டுக் கணக்காக இருக்க வேண்டும். இதை வங்கிகள் பொதுவாக வலியுறுத்துவதில்லை. அதோடு உங்களுடைய பாதுகாப்பு பெட்டக கணக்கிற்கு வாரிசுதாரர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஏனெனில் உங்களுக்கு ஏதாவது எதிர்பாராத அசம்பாவிதம் நேர்ந்து விட்டால், உங்களுடைய பாதுகாப்பு பெட்டக கணக்கு எந்த வித தொந்தரவும் இல்லாமல் செயல்படும்.

5. விலையுயர்ந்த பொருட்களின் மீது ஒரு கண் வைத்திருங்கள்: ஏற்கனவே கூறியபடி, பாதுகாப்புப் பெட்டகத்தை ஒரு சீரான இடைவெளியில் பார்வையிடுவது மிகவும் அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் விலையுயர்ந்த பொருட்களின் மீது நீங்கள் ஒரு கண் வைத்திருக்க உதவுவதுடன், நகைகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களின் பாதுகாப்பை உறுதிசெய்கின்றன. அதோடு பாதுகாப்புப் பெட்டகத்தில் புதிய நகைகளைச் சேர்ப்பது அல்லது அகற்றுவதை எளிதாக்க உதவும்.

பிற முக்கியமானவை இந்தப் பொது விதிகளைத் தவிர, வங்கிகள் எச்சரிக்கை அமைப்பு, இரும்புக் கம்பி அறைகள், சி.சி.டி.வி வழியாக மின்னணு கண்காணிப்பு போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நீங்கள் எப்பொழுது லாக்கரைத் திறக்கச் சென்றாலும் உங்களுடன் உடன் வரும் பணியாளர் வெளியே சென்றவுடன் லாக்கரைத் திறக்கவும். லாக்கரில் உங்களுடைய வேலை முடிந்த உடன் அதை ஒழுங்காகப் பூட்டி விட்டீர்களா என்பதை ஒரு முறைக்கு இருமுறை உறுதி செய்து கொள்ளவும்

பாதுகாப்பு லாக்கரில் வைத்திருக்கும் விலையுர்ந்த பொருட்களின் பட்டியலை எப்பொழுதும் உங்களுடன் வைத்திருக்கவும். நகைகளை அதனுடைய பில்களுடன் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் ஒரு வேளை உங்களுக்கு இழப்பு ஏற்பட்டால் உங்களுடைய சொத்துக்களின் மதிப்பு உங்களுக்குத் தெரிய வரும். இங்கே குறிப்பிடத்தக்க மற்றொரு எச்சரிக்கை என்னவெனில், நீங்கள் லாக்கரில் வைத்திருக்கும் ஒவ்வொரு ஆவணத்தையும் லேமினேட் செய்து வைத்திருக்க வேண்டும். அதோடு அந்த ஆவணங்களின் ஒரு நகலை எப்பொழுதும் உங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். மேலும் லாக்கரில் மிக முக்கியமான மற்றும் மிகவும் தேவையான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டாம்.

குழந்தைகளுக்கான வங்கி கணக்கை ( How to open bank account for kids) தொடங்குவது எப்படி?

குழந்தைகளுக்கான வங்கி கணக்கை ( How to open bank account for kids) தொடங்குவது எப்படி?               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


பதினெட்டு வயதுக்கும் குறைவானவர்களுக்காக "மைனர் வங்கிக் கணக்கு ("minor account") வசதியை வங்கிகள் வழங்குகின்றன. இக் கணக்கின் மூலம், மிகக் குறைந்த வயதிலேயே சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள இயலும். கல்விக்கான காப்பீடு, நிலையான வைப்பீடு, மற்றும் அதிகமான வட்டி விகிதம் எனப் பல சிறப்பு அம்சங்களைக் குழந்தைகளுக்கான வங்கிக் கணக்குகள் கொண்டுள்ளன.

உங்களுடைய குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்குத் தொடங்குவதன் மூலம் அவர்களுக்குப் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த முடியும்.

வங்கிக் கணக்குத் தொடங்க தேவையானவை பதினெட்டு வயது நிரம்பாத சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாக இவ்வகையான கணக்குகளைத் தொடங்கு முடியும். குழந்தைகளுக்குக் கூட இவ்வகையான கணக்குகளைத் தொடங்கலாம். ஒரே வங்கியில் கணக்குத் தொடங்கலாம் : பெற்றோருக்குக் கணக்கு உள்ள வங்கிகளில் அவர்களுடைய குழந்தைகளுக்கும் வங்கிக் கணக்குத் தொடங்குவதைத் தான் பெரும்பாலான வங்கிகள் விரும்புகின்றன.

முகவரிக்கு ஆதாரம் ஆதார் அட்டை உட்பட அரசு வழங்கிய ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் குழந்தைக்கும் பெற்றோருக்கும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்

கையெழுத்து மாதிரி குழந்தையின் கையெழுத்து மாதிரி (பத்து வயதுக்கு மேற்பட்டு இருந்தால்) மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கையெழுத்து மாதிரியைச் சமர்ப்பிக்க வேண்டும்

சிறப்பு அம்சங்கள் குழந்தைகளுக்கான வங்கிக் கணக்குகள் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. இது வங்கிகளுக்கு வங்கி மாறுபடும்.

தேவையான குறைந்தபட்ச இருப்பு உதாரணமாக, எச்டிஎப்சி வங்கி, மைனர் வங்கிக் கணக்குக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 5000 ரூபாய் என நிர்ணயித்துள்ளது

வட்டி விகிதம் பொதுவாகச் சிறுவர்களுக்கான வங்கிக் கணக்குகளுக்கு அதிகமான வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும். சில வங்கிகள் பெற்றோருடன் சேர்ந்த கூட்டு வங்கிக் கணக்கு தொடங்கவும் அனுமதிக்கின்றன.

டெபிட் கார்டு வசதி கோடக் மஹிந்திரா போன்ற வங்கிகள், ஜீனியர் சேமிப்புக் கணக்குகளுக்கு, ஒரு நாளைக்கு 5000 ரூபாய் வரை பணம் எடுக்கும் வசதியுடன் கூடிய டெபிட் கார்டுகளை வழங்குகின்றன

சுழல் வைப்புநிதி வசதி பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை நிலை வைப்பாகக் குழந்தைகளின் கணக்கிற்கு மாற்றப்படும்.

நிலையான வைப்புத் தொகை உதாரணமாக HDFC வங்கி சிறுவர் வங்கிக் கணக்குகளில் 25,000 ரூபாய்க்கு அதிகமான எந்தத் தொகையையும் நிலை வைப்புநிதியாக வைத்துக் கொள்ளும். குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இத்தொகை மிக அதிக வட்டியுடன் திருப்பி அளிக்கப்படும்.

கல்விக்கான காப்பீடு முக்கியமான வங்கிகள், சிறுவர் வங்கிக் கணக்குகளுக்குக் கல்விக் காப்பீடு வசதியையும் வழங்குகின்றன. ஒரு வேளை குழந்தைகளின் காப்பாளர் இறந்துவிட்டால் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு இது உதவும். காசோலைகள், இணைய வங்கிச் சேவை போன்ற பிற வசதிகளும் இவ்வங்கிக் கணக்கிற்கு வழங்கப்படுகின்றன. பெரும்பாலான வங்கிகள், குழந்தைகளுக்கு 10 வயது நிரம்பியவுடன்தான் அவர்களை வங்கிக் கணக்குகளை இயக்க அனுமதிக்கின்றன.

கவனத்தில் கொள்ள வேண்டியவை குழந்தைகளுக்குப் பதினெட்டு வயது ஆனவுடன் அவர்களுடைய வங்கிக் கணக்கு வழக்கமான சேமிப்புக் கணக்காக மாற்றப்படும். இக்கணக்கை இயக்குகின்ற உரிமை காப்பாளர்களுக்கு மறுக்கப்படும். மேலும், தேவையான தகவல்கள் பெறப்பட்டு இந்த வங்கிக் கணக்குப் பதினெட்டு வயது நிரம்பியவரின் பெயரில் முழுமையான கணக்காக மாற்றப்படும். குழந்தை வங்கிக் கணக்குகளின் பரிமாற்றங்களுக்கு வங்கிகள் சில குறிப்பிட்ட வரையறைகளை விதித்திருந்தாலும், இக்கணக்கிலிருந்து காப்பாளர்கள் அதிகப்படியாகப் பணம் எடுப்பதற்கும், மேலும் சில பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கும் வங்கிகள் அனுமதி வழங்கும்.

அவசர நிதி (Emergency-corpus) என்றால் என்ன?

அவசர நிதி (Emergency-corpus) என்றால் என்ன?

அவசர நிதி (Emergency-corpus) என்றால் என்ன? ஏன் இது முக்கியம்?               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


அவசர கார்பஸ் அல்லது அவசர நிதி என்பது எதிர்பார்க்காத தருணங்களின் தேவைக்காக உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் விதத்தில் வைக்கப்படும் பணமாகும். இது வேலை இழப்பு, முக்கியமான மருத்துவப் பிரச்சினைகள், வருமானத்தில் தாமதம் அல்லது இறப்பு போன்ற மோசமான சூழ்நிலையில் ஒருவருக்குப் பெரிய உதவியாக இருக்கும். இந்த அவசர சூழ்நிலைகள் குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் என்று பிரிக்கப்படுகிறது. மருத்துவச் செலவு, அல்லது சம்பளம் பெறுவதில் தாமதம் போன்றவை குறுகிய கால அவசர தேவைகள் ஆகும். அதே சமயம், வேலை இழப்பு போன்றவை நீண்ட கால அவசர தேவையாகும். சிறிய வர்த்தக வியாபாரங்களுக்கான, அவசர நிதி அவசியமாகிறது.

வணிகர்கள் பல சந்தர்ப்பங்களில், வணிகர்கள் பொறுப்பற்ற முறையில் தங்கள் சொந்த நிதிகளில் பெரும் பகுதியை தங்கள் வியாபாரத்தில் முதலீடு செய்கிறார்கள். பங்குச் சந்தையின் முடிவுகள் தீர்மானிக்க முடியாததாக இருப்பதால் முதலீடு செய்யும் பணம் லாபமா அல்லது நஷ்டமா என்பதை முன்கூடியே உறுதியாகச் சொல்வதற்கில்லை. புத்திசாலியான வியாபாரிகள் கூடத் திவாலாகிவிட்ட நிலைமைகளும் உள்ளன. இத்தகைய பேரழிவுகளுக்கு அவசர நிதி அவசியம்.

கடன் சிறிய வியாபாரங்கள் தோல்வியடையும் காரணங்களில் ஒன்று, கடன் அட்டைகள் அல்லது பாதுகாப்பற்ற தனிப்பட்ட கடன்களில் கடன் பெறுவது போன்ற குறுகிய காலக் கடன்களை எடுத்துக்கொள்வதற்கான ஆபத்துகளாகும். இந்தக் கடன்களின் மீதான அதிக வட்டி விகிதம் , வர்த்தகரின் வருவாயைக் கடந்துவிடும்.

உங்கள் அவசர தேவைக்குத் திட்டமிடுங்கள் ஒவ்வொரு வியாபார திட்டத்திற்கும் அவசர நிதி என்பது முகவும் முக்கியம். இதில் மற்றொரு முக்கியச் செய்தி, இந்த அவசர நிதியை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது. உங்களுடைய அவசர நிதியை அணுகுவதற்கு நீங்கள் தீவிரமாகக் கருதுகிற நிகழ்வுகளின் பட்டியல் அவசியம். அவற்றுள் சில, 1) சந்தையில் திடீர் ஏற்றத்தாழ்வு 2) பொருளாதார நெருக்கடி அல்லது சரிவு 3) தனிப்பட்ட இயலாமை அல்லது உடல்நல அவசரநிலை 4) இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள் எவ்வாறாயினும், ஒவ்வொரு எதிர்பாராத சம்பவமும் அவசர நிதியத்தைப் பயன்படுத்துவதற்கு ஒரு தவிர்க்க முடியாத காரணியாகக் கருதப்படக்கூடாது. அவசர நிதி பயன்படுத்த உங்கள் காரணங்கள் தெளிவாக இருக்க வேண்டும். மறுபுறம், அவசர நிதியில் இருந்து கூடுதலான திரவச் சொத்துக்களைப் பராமரிப்பது, உங்களுக்கு மிகவும் இலாபகரமான வாய்ப்புகளை வழங்க உதவுகிறது. உதாரணமாக, ஒரு நல்ல IPO அல்லது ஒரு நிகழ்வு சார்ந்த பங்கு வர்த்தகம் முதலீடு நல்ல பலனைத் தரலாம். திரவச் சொத்துக்கள் , உங்கள் வணிகம் உறுதியாகவும் எளிதாகவும் பயணிக்க உதவுகிறது.

தனிக் கணக்கை பராமரிக்க வேண்டும் உங்கள் தனிப்பட்ட கணக்கு உங்கள் வணிகக் கணக்கிலிருந்து தனித்திருப்பது போலவே, உங்கள் அவசர கணக்கு உங்கள் வணிகக் கணக்கில் இருந்து பிரிக்கப்பட வேண்டும். இந்தப் பழக்கம், அவசரம் அல்லாத போது அவசர நிதி பயன்படுத்தும் சலனத்தைக் குறைக்கும். இன்னும் வலியுறுத்திக் கூற,வேண்டுமானால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்குத் தவிர, அவசரக்கால நிதி வரம்புகளை நிறுத்த வேண்டும். அவசர நிதியைப் பாதுகாக்க ஒரு சிறந்த இடம் சேமிப்பு கணக்கு மட்டுமே ஆகும். சில வகைக் கணக்குகளில் , பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெறும்போது சில அபராதம் விதிக்கப்படலாம், அல்லது பணம் கிடைப்பதில் காலத் தாமதம் ஏற்படலாம். இத்தகைய திட்டத்தில் அவசர நிதிகளை முடக்கம் செய்ய வேண்டாம். ஒரு நிலையான வைப்பு நிதியில் பணத்தைச் சேமித்து வைக்கவும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்களுக்கு அவசர தேவை ஏற்படும்போது உங்கள் கையில் பணப்புழக்கம் இருக்கவேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ம்யுசுவல் பன்ட் முதலீடு கூட இந்த நோக்கத்தைப் பாதிக்கலாம்.

அவசர நிதி தொகை தனிப்பட்ட அவசர நிதியத்தின் முக்கிய விதி இங்கே பயன்படுத்தப்படலாம். தொடக்க நிலை வர்த்தகர்கள், உங்கள் நிறுவன இயக்கத்திற்கான மூன்று மாத தொகையை அவசர நிதியாகச் சேமித்து வைக்கலாம். இதனைச் செய்ய, உங்கள் வர்த்தக நிறுவனத்தின் ஒரு மாதத்திற்கான செலவை கணக்கிட வேண்டும். செலவுகள் உங்கள் மாதாந்திர முதலீட்டு அளவு, தரகு கட்டணங்கள் மற்றும் இதர செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

நீங்கள் அதிக ஆபத்தை எடுக்கும் வர்த்தகர் என்றால், அவசர நிதி அதற்கேற்ப மாற்றி அமைக்கப்பட வேண்டும். உங்களுடைய அபாயச் சூழ்நிலை மற்றும் கணக்கீடுகளையும் பொறுத்து, உங்கள் செலவினங்களில் மூன்று-ஆறு மாதங்களை உள்ளடக்கிய நிதி உருவாக்கலாம். எந்த ஒரு சந்தர்ப்பத்திற்கும் நீங்கள் தயாராக இருக்கும்பட்சத்தில், நீங்கள் நிம்மதியாக உங்கள் வர்த்தகத்தில் கவனம் செலுத்த முடியும். வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்க முடியும்.

K.Karthik Raja - What is Micro and Macro Economics ?

K.Karthik Raja  - What is Micro and Macro Economics ?

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

Share Market Training & Online Stock Market Courses - Share Trading Academy - Join whatsapp 9094047040

Share Market Training & Online Stock Market Courses - Share Trading Academy - Rupeedesk
Stock Market Training | Share Market Training | Classes | Institute | Chennai | Courses
Nifty Option Profit Making Strategy - Share Market Training - Join  whatsapp 9841986753
How to make Profit in Intraday Trading (One to One Training in Chennai)
Share Market Training Institutes and Training - Chennai -9094047040
Stock Market Online Course - Join Whatsapp 91- 9841986753
Share Market Courses Online - Join 9094047040
Share Market TrainingK Karthik Raja

K Karthik Raja

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

Share Market Training & Online Stock Market Courses - Share Trading Academy - Join whatsapp 9094047040

Share Market Training & Online Stock Market Courses - Share Trading Academy - Rupeedesk
Stock Market Training | Share Market Training | Classes | Institute | Chennai | Courses
Nifty Option Profit Making Strategy - Share Market Training - Join  whatsapp 9841986753
How to make Profit in Intraday Trading (One to One Training in Chennai)
Share Market Training Institutes and Training - Chennai -9094047040
Stock Market Online Course - Join Whatsapp 91- 9841986753
Share Market Courses Online - Join 9094047040
Share Market Trainingஃப்ரீலான்ஸர்கள் எப்படித் தங்கள் நிதி நிலையை நிர்வாகம் செய்ய வேண்டும்

 ஃப்ரீலான்ஸர்கள் (Freelancer) எப்படித் தங்கள் நிதி நிலையை நிர்வாகம் செய்ய வேண்டும்


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


சுந்தர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு ஃப்ரீலான்ஸ் க்ரியேடிவ் டிசைனராகப் பணி புரிந்து வருகிறார். சுய தொழில் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடைய வேலையைக் கைவிட்டார். அவருடைய இந்தச் சுய தொழிலில், வேலை அவருக்குப் பிடித்திருந்தாலும், ஒழுங்கற்ற பண வரவு, அவருடைய பண மேலாண்மையைப் பாதித்தது.

ஒவ்வொரு முறையும் அவருக்குப் பண வரவு இருக்கும்போது அதனை அவர் செலவழித்துக் கொண்டிருந்தார். அவர் தனக்குக் கிடைக்கும் பணத்தைச் சேமிக்கக் வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் அவரால் ஒரு குறைந்த அளவு பணத்தை மட்டுமே சேமிக்க முடிந்தது. அவருடைய நிதி நிலைமையைச் சரியான பாதையில் கொண்டு வர அவர் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளவும் இக்காலகட்டத்தில் விரும்பினார். சுந்தர் தனக்கு வழக்கமான வருமானம் கிடைத்தவுடன் தொடக்க நிலையில் இருக்கும் தன்னைப் போன்றவர்களுக்கு இதே நிலை இருக்கும் என்பதை உணர்ந்தார். ஆகவே ஃப்ரீலான்ஸ் எனப்படும் சுய தொழில் செய்பவர்கள் நிதி நிலையை மேம்படுத்த சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் படியாகத் தனது ஆண்டு வருமானத்தை மதிப்பிட வேண்டும். சுய தொழிலில் வருமானம் ஒழுங்கற்றதாக இருப்பதால், தான் எதிர்பார்க்கும் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாத சம்பளத்தைத் தானே தயாரிக்க முடிவு செய்ய வேண்டும் . ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சம்பளமாகச் செலுத்த வேண்டும். சாத்தியமான வருவாயில் ஒரு குறைந்தபட்ச மதிப்பீடு செய்வது சிறந்தது. இல்லையெனில் தேவையானதை விடக் குறைந்த அளவு பணத்தைச் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். அடிப்படை வருமானத்தை ஏற்படுத்தியவுடன் செலவினங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இது உங்களின் வருமானத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். உங்களின் செலவீனங்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் முறைப்படுத்த வேண்டும். அனைத்துக் கட்டாய மற்றும் அத்தியாவசிய வாழ்க்கை செலவுகளை முன்னிலைப் படுத்த வேண்டும். உங்கள் தொழில் உறுதியாக நிலைக்கும்வரை, வாழ்க்கை முறை செலவீனங்களைக் குறைப்பது நல்லது. ஆரோக்கியம், ஆயுள் காப்பீடு, மற்றும் வரிப் பொறுப்புகள் போன்றவற்றிற்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் ஒருவரின் பொருளாதாரச் சூழ்நிலையைத் தடம் புரள வைக்கும். இதற்கிடையில் ஒரு அவசர நிதி உற்பத்தி செய்வது அவசியமாகும். வருவாய்க்கும் செலவுக்கும் இடையில் எதிர்பாராத இடைவெளி ஏற்படும் போது இந்த அவசர நிதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இடைவெளியைக் குறைக்க இந்த அவசர நிதி உங்களுக்கு உதவும். வருமானம் அதிகப்படியாக வரும்போது, ஏற்கனவே பயன்படுத்திய அவசர நிதியை மறுபடியும் விரைந்து நிரப்ப வேண்டும்.

சுய தொழில் செய்பவர்கள் எந்த ஒரு கட்டாய ஊழியர் சேமிப்பு திட்டத்திலும் இணைக்கப்படாததால், தனது வருமானத்தில் ஒரு பங்கை சேமித்து வைக்க முயற்சிக்க வேண்டும். சம்பளத்திற்கு மேல் அதிகரித்த வருவாய் கிடைக்கும்போது வீண் செலவுகளைச் செய்யாமல் முதலீடுகளை உருவாக்க வேண்டும்.

முதலீடுகள் செய்யும் போது நாமினி ஏன் முக்கியம்

முதலீடுகள் செய்யும் போது நாமினி ஏன் முக்கியம்

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

ஒவ்வொரு முறையும் முதலீட்டிற்கான விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்யும்போது , அது நிலையான வைப்பு நிதியாக இருந்தாலும், மியூசுவல் நிதியாக இருந்தாலும், வங்கியில் புதிய கணக்குத் துவங்குவதாக இருந்தாலும் அந்தப் படிவத்தில் ஒரு தனிப் பிரிவு ஒன்று இருக்கும். அதில் உங்கள் நாமினி பற்றிய குறிப்பைத் தருமாறு வேண்டியிருப்பார்கள். இந்தப் பகுதியை பெரும்பாலும் பலர் எதுவும் எழுதாமல் காலியாவே பதிவு செய்வார்கள். ஆனால் அதனை அப்படிச் செய்வது தவறு. இது குறித்துத் தெளிவு ஏற்படுத்துவதற்காகத்தான் இந்தப் பதிவு.

நாமினி என்பவர் யார்? நாமினி என்று உங்கள் முதலீட்டு விண்ணப்பம், அல்லது வங்கி கணக்கு விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் நபர், உங்களின் எதிர்பாராத மறைவிற்குப் பிறகு உங்கள் கணக்கில் உள்ள தொகையைப் பெறுவதற்கான உரிமை உள்ளவர். நாமினியாக உங்கள் முதல்வட்ட சொந்தத்தை நீங்கள் அறிவிக்கலாம். அதாவது உங்கள் பெற்றோர், உங்கள் துணைவர், அல்லது உங்கள் உடன்பிறந்தவர்கள். சில முதலீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினியை குறிப்பிடும்படி அனுமதிக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் ஒவ்வொரு நபருக்கும் உங்கள் தொகையில் குறிப்பிட்ட விகிதத்தைப் பிரித்துப் பதிவு செய்யலாம். அப்படி நீங்கள் எந்த விகிதமும் குறிப்பிடாமல் இருந்தால் உங்கள் கணக்கில் உள்ள தொகை சமமாகப் பிரிக்கப்படும்.

ஏன் ஒருவரை நியமிக்கவேண்டும்? எதிர்பாராத விதமாக இறந்தவரின் வங்கி கணக்கில் மற்றும் முதலீட்டில் இருக்கும் பணம் அவருடைய சட்ட வாரிசுகளுக்கு உரிமையாகிறது. இதனைச் சொல்வதற்கு மிகவும் சுலபமாக இருந்தாலும் செயல்முறையில் இது மிகப்பெரிய காரியமாக உள்ளது. பல வித ஆவணங்கள் , இறப்புச் சான்றிதழ் சில நேரங்களில் நீதிமன்ற ஆர்டர் போன்றவையும் தேவைப்படுகிறது. வங்கிக்கு தேவையான ஆவணங்கள் கிடைக்கும் வரை, இறந்தவரின் பணம் வங்கியிலேயே வைக்கப்படும். இந்த முழுச் செயல்முறையும் முடிய சில வாரங்கள் பிடிக்கும். இருப்பினும், வங்கி கணக்குத் தொடங்கும்போது அல்லது அதற்குப் பின்னர், உங்கள் பெயர் நாமினியாக இணைக்கப்பட்டிருந்தால் இந்தச் செயல்முறை சற்று எளிதாகவும் விரைவாகவும் முடியும். வங்கியும் நியமிக்கப்பட்டவரிடம் குறைந்த ஆவணங்கள் மூலம் பணத்தைக் கொடுத்துவிடலாம்.

வங்கி லாக்கருக்கும் நாமினி உண்டு வங்கி கணக்கு மற்றும் வைப்பு நிதிகளுக்கு மட்டும் எதிர்பாராத படி இறந்தவருக்கான நாமினி தேவைப்படுவதில்லை, வங்கி லாக்கருக்கும் நாமினி தேவை. லாக்கர் கணக்கு வைத்திருப்பவரின் திடீர் மறைவிற்குப் பின், நாமினி இல்லையேல், குறிப்பிட்ட ஆவணங்கள் கொடுத்த பிறகே, லாக்கரில் உள்ள பணம் மற்றும் நகைகளை வங்கியில் இருந்து ஒப்படைப்பார்கள். இதனை இங்கே குறிப்பிடக் காரணம், இந்திய பெண்கள் தங்கள் நகைகளை வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம். ஆகவே இத்தகைய நெருக்கடியான சூழலில், நகைகளுக்கான தேவை அதிகமாக இருக்கும். புதிதாக மணமானவர்கள் அல்லது கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்குப் பேங்க் லாக்கர் கணக்கிற்கும் நாமினி அவசியம் தேவை.

பணத்தை வங்கியிடம் கோரப்படாமல் இருக்கக் கூடாது இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரியில் தந்த அறிக்கை பிரகாரம், ரூபாய் 8,000 கோடி கோரப்படாத நிதியாக நாடு முழுவதும் உள்ள வங்கியில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. உரிமையாளர் இல்லாத வைப்பு நிதி, கோரப்படாத நிதியாக அறிவிக்கப்படுகிறது. அசல் உரிமையாளர் வைப்பு நிதியின் விவரத்தை இழந்திருக்கலாம், அல்லது இறந்திருக்கலாம் அல்லது நாமினி பற்றிய தகவலை குறிப்பிடாமல் இருக்கலாம். இதன் காரணமாக இந்த நிதி கோரப்படாத நிதியாக உள்ளது. நாமினி பெயர் குறிப்பிடாமல் இருப்பதால் எவ்வளவு பிரச்சனை என்பதை இந்த மாபெரும் தொகை நமக்குத் தெரியப்படுத்துகிறது. ஒரு முறை வங்கிக்கு சென்று உங்கள் கணக்கில் நாமினி பெயர் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளுங்கள். அப்படி நீங்கள் குறிப்பிடவில்லை என்றால் அதற்கான படிவத்தை வாங்கி விண்ணப்பியுங்கள்.

பெண்கள் பெண்கள் இந்தப் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குடும்ப உறுப்பினரின் திடீர் மறைவால் அவர்கள் கஷ்டப்படும்போது அவர்களின் பணமும் பறிபோவது நிச்சயம் நடக்கக் கூடாத ஒன்று. இத்தகைய சூழ்நிலையை யாரும் அனுமதிக்கக் கூடாது. நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் நாமினியாக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் அல்லது உங்களுக்கு ஒரு நாமினி உள்ளார் என்பதை உங்கள் வீட்டுப் பெண்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இதனால் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். வருங்காலத்தில் ஏற்படும் நிச்சயமற்ற சூழலை சமாளிக்க ஒரு தன்னம்பிக்கை ஏற்படும்.

நேர்முகத் தேர்வில் நிகழும் தவறுகளை திருத்தி -வெல்வது எப்படி?

நேர்முகத் தேர்வில் நிகழும் தவறுகளை திருத்தி, வெல்வது எப்படி?


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

நேர்முகத் தேர்வில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறுகள் என்ன? அதை திருத்திக் கொண்டு வெற்றிபெறுவது எப்படி? என்பது பற்றி இங்கு காண்போம்..

நேர்முகத்தேர்வு வாழ்வின் அடுத்த அத்தியாயத்தின் வாசல் கதவு. முறையான புரிதலுடன் நேர்முகத்தேர்வை அணுகுபவர்களுக்கு மட்டுமே அந்தக் கதவு திறந்து வாழ்வில் புதிய வழி பிறக்கிறது. வேலையில் சேர கனவுகளோடு காத்திருக்கும் பலருக்கும் நேர்முகத்தேர்வு என்றாலே சிறிது அச்சமும், பதற்றமும் இருக்கலாம். சரியாக திட்டமிடாததால் நேர்முகத் தேர்வில் கோட்டை விட்டவர்கள் பலர் உண்டு. நேர்முகத் தேர்வில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறுகள் என்ன? அதை திருத்திக் கொண்டு வெற்றிபெறுவது எப்படி? என்பது பற்றி இங்கு காண்போம்...

பணி, பணியிடம் பற்றி அறியாதிருத்தல்:

நேர்முகத் தேர்விற்கு செல்லும் பலரும் கண்டுகொள்ளாத மிக முக்கியமான விஷயம் இது. தாங்கள் செல்லும் அலுவலகம் மற்றும் பணி பற்றிய தகவல்கள் ஏதும் அறியாமல் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வது பலரது வாடிக்கை. இப்படிச் சென்றால் மேலாளர் உங்களுக்கு பணியின் மீது ஆர்வம் இல்லை என்று எண்ணக் கூடும். எனவே பணி, பணியிடம் என அலுவலகம் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது மேலாளரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய உதவும்.

தாமதமாக செல்லுதல்:

சிலருக்கு, இது சாதாரணமான விஷயமாக தெரியலாம். ஆனால் நீங்கள் காலத்தின் முக்கியத்தை எந்த அளவிற்கு உணர்ந்து செயல்படுகிறீர்களோ, அந்த அளவிற்கு மேலாளரின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்க்க உதவும். எனவே நேர்முகத்தேர்வுக்கு தயாராகும் போதே தேர்விற்கு செல்லும் இடம், போக்குவரத்து, புறப்படும் நேரம் என எல்லாவற்றையும் குறித்து திட்டமிட்டுக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே அங்கு இருப்பதற்கு ஏற்ற வகையில் விவேகமாக செயல்படுங்கள். ஏனெனில் உங்கள் எதிர்கால பயணத்திற்கு ‘டிராபிக்’ ஒரு தடையாகி விடக்கூடாது.

மிடுக்கான உடை:

நேர்முகத்தேர்வை பொறுத்தமட்டில் ஆடையின் பங்கு என்பது மிக முக்கியமானது. பார்த்தவுடன் உங்கள் மீது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்துவது உங்கள் உடைதான். எனவே டீ-சர்ட், ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அறவே தவிர்த்துவிடுங்கள். மிடுக்கான உடையை நேர்த்தியாக அணிந்து செல்லுங்கள்.

பேசும் விதம்:

உங்கள் குணநலனை பற்றி மேலாளருக்கு உணர்த்துவது நீங்கள் பேசும் விதம்தான். பலரும் எங்கோ பார்த்தபடி அல்லது குனிந்தபடி பதிலளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதிகாரிகள் கேள்வி கேட்கும் போதும் சரி, நீங்கள் பதில் சொல்லும் போதும் சரி, நேராக தேர்வாளரின் கண்களை பார்த்து பேசினால்தான் நீங்கள் தைரியமான திறமையான நபர் என்று அவர் அறிந்து கொள்ள முடியும். மேலும் நீங்கள் பேசுகின்ற வார்த்தைகளும் அவர்கள் கேட்டுகேட்டு சலிப்படைந்த வார்த்தைகளாக இல்லாமல் புதிய ஈர்ப்புடைய வார்த்தைகளாக இருந்தால் உங்களால் நிச்சயம் அவர்களை கவர முடியும்.


கேள்வி கேட்பது:

பொதுவாகவே நேர்முகத்தேர்வில் பங்கேற்பவர்களிடம் அங்குள்ள அதிகாரிகள் நீங்கள் ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் கேட்க விரும்புகிறீர்களா? என்று கேட்பார்கள். அதற்கு பலரும் இல்லையென்று நழுவிக் கொள்வதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவ்வாறாக இல்லாமல் உங்கள் மனதில் தோன்றும் நியாயமான கேள்வி, சந்தேகங்களை கேட்டால் நீங்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிவீர்கள். மேலும் அதிகாரிகள் உங்களை தேர்வு செய்வதற்கு இது தூண்டுதலாக அமையும்.

செல்போனை அணைப்பது:

நேர்முகத்தேர்வு அறைக்குள் செல்லும் முன் கூடுமானவரை உங்கள் செல்போனை அணைத்து வைத்து விடுவது சிறந்தது. முடியாத பட்சத்தில் அதை ஒலிஅற்ற நிலையிலாவது (சைலண்ட் மோடு) வைத்திருங்கள். இது உங்களுக்கும், அங்குள்ள பிறருக்கும் கவனச்சிதறல் ஏற்படுவதை தவிர்க்க உதவும். நன்மதிப்பையும் பெற்றுத் தரும்.

பொய் கூறுதல்:

ஒரு ஆய்வில் நேர்முகத்தேர்விற்கு செல்வோர் அளிக்கும் சுயவிவரங்களில் பலர் பொய்யான தகவல்களை அளிப்பதாக தெரிய வந்துள்ளது. வலைத்தளத்தில் இருந்து ஏதாவது ஒரு ரெஸ்யூமை ‘காப்பி’யடிப்பது பலரது பழக்கமாக உள்ளது. அதில் பெயர், முகவரி போன்றவற்றை மட்டும் திருத்தி பெரும்பாலானோர் தங்களது ரெஸ்யூமை தயார் செய்கின்றனர். அப்போது சில முக்கிய விவரங்களை நீக்காமலும், உயர்த்தி சொல்வதற்காக உண்மையற்ற சில விவரங்களை குறிப்பிட்டும் வைக்கிறார்கள். இப்படி தேவையற்ற தகவல்களை குறிப்பிடுவது பலரின் நேர்காணலை முடித்து வைத்திருக்கிறது.

போலியாக குறிப்பிட்ட விஷயங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்போது மாட்டிக் கொண்டவர்கள் பலர். உதாரணமாக பாப் மியூசிக்கை ரசிப்பேன் என்று குறிப்பிட்டிருந்தால், அதுபற்றிய கேள்விகளுக்கும் விடையளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பொழுதுபோக்கு விஷயமான இதிலிருந்தா கேள்வி கேட்பார்கள் என்று தேவையற்ற விவரங்களை கொடுத்துவிட்டு பதில் தெரியாமல் அவஸ்தைப்படக்கூடாது. இதுபோல சாதாரணமான விஷயங்களிலும் உண்மையான விவரங்களையே பதிவு செய்ய வேண்டும். அதுவே உங்களைப் பற்றிய நல்லெண்ணத்தை தோற்றுவிக்கும். வெற்றிக்கு வித்திடும்.

மேற்காணும் தவறுகளை பொறுப்புடன் உணர்ந்து திருத்திக் கொண்டால், நீங்கள் நேர்காணலில் ஜெயிக்கப்போவது நிஜம்! 

K.Karthik Raja - What is Market Capitalization ?

K.Karthik Raja  - What is Market Capitalization ?

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

Share Market Training & Online Stock Market Courses - Share Trading Academy - Join whatsapp 9094047040

Share Market Training & Online Stock Market Courses - Share Trading Academy - Rupeedesk
Stock Market Training | Share Market Training | Classes | Institute | Chennai | Courses
Nifty Option Profit Making Strategy - Share Market Training - Join  whatsapp 9841986753
How to make Profit in Intraday Trading (One to One Training in Chennai)
Share Market Training Institutes and Training - Chennai -9094047040
Stock Market Online Course - Join Whatsapp 91- 9841986753
Share Market Courses Online - Join 9094047040
Share Market Training