என்ஆர்ஐகள் (NRI) இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

என்ஆர்ஐகள் (NRI) இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்படி?               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


நீங்கள் என்ஆர்ஐ ஆக இருந்து இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்று விருப்பம் உள்ளவர் என்றால் இங்கு உள்ள எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் எளிதாக முதலீடு செய்யலாம்.

பவர் ஆப் அட்டார்னி

என்ஆர்ஐ இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அவருக்கு இந்திய வங்கி கணக்கு ஒன்று இருக்க வேண்டும். அதனை நிர்வகிக்க இந்தியாவில் உள்ள ஒருவருக்கு பவர் ஆப் அட்டார்னி வழங்க வேண்டும்.

அதற்கு வெளிநாட்டில் உள்ள ஆதாரங்கள் உடன் ஸ்பெசிமன் கையெழுத்தையும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

கணக்கை நிர்வகிக்க வேண்டிய நபரும் படிவத்தில் கையெழுத்தை இட வேண்டும். மேலும் நிர்வகிப்பாளரின் வாடிக்கையாளர் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இணையதள பங்கு சந்தை முதலீடு

தங்களது கணக்கை பிறர் நிர்வகிப்பதை விரும்பாதவர்கள் இணையதள வங்கி கணக்கின் மூலம் தங்களது டீமேட் கணக்கையும் எளிதாக உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தாங்களாகவே முதலீடுகளை செய்ய முடியும்.

இணையதளம் மூலம் முதலீடு செய்ய விரும்பும் என்ஆர்ஐ-களுக்காக பிரத்தியேக டிரேடிங் சேவையினையும் சில ப்ரோக்ரேஜ் நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால் தாங்கள் இருக்கும் நாடுகளின் நேரத்தினை பொருத்து டிரேடிங் கணக்கை நிர்வகிப்பது மட்டும் சிரமமாக இருக்கும்.

அங்கீகாரம் பெற்ற நபர்

என்ஆர்ஐ கணக்கை நிர்வகிக்க அங்கீகாரம் பெற்ற நபர் ஒருவரை நியமிக்க முடியும். என்ஆர்ஐ-க்கு பதிலாக அங்கிகாரம் பெற்ற நபராலும் கணக்கை நிர்வகிக்க முடியும்.

இதற்காக அங்கிகாரம் பெற்ற நபர் தேவையான ஸ்டாம்ப் பேப்பர் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும், மற்றும் எதற்காக ஆங்கிகாரம் பெற்ற நபராக நியமிக்கப்படுகின்றார் என்பதையும் குறிப்பிட வேண்டும். அங்கிகாரம் பெற்ற நபரால் முதலீடுகளைச் செய்ய முடியும், என்ஆர்ஐ-க்கு பதிலாக அனைத்துத் தேவையான ஆவணப் பனிகளையும் இவரால் செய்ய முடியும்.

வரம்புஎன்ஆர்ஐ கணக்கு வைத்துள்ளவர்கள் அதிகபட்ச பணம் எடுக்கும் வரம்பு ஒன்றை நிர்வகிக்க வேண்டும். முதலீடு செய்யும் பொது அங்கிகாரம் பெற்ற நபருக்கான தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். என்ஆர்ஐ-க்கு அவர்கள் இருக்கும் நாடுகளில் உள்ள நேரங்கள் தான் பெறும் சிக்கலாக இருக்கும்.