எஸ்ஐபி(SIP- Systematic Investment Plan) திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டுமா?

எஸ்ஐபி(SIP- Systematic Investment Plan) திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டுமா?


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


இன்றைய சூழலில் அனைத்துச் செயல்முறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில், நீங்கள் ஒரு முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்கும் வழிமுறைகளைத் தேடுகின்றீர்கள் என்றால், நீங்கள் ஒரு சிக்கல்களற்ற மற்றும் எளிமையான முறையில் அதை இணையத்தில் செய்யலாம்.
எனவே, உங்கள் முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தைத் இணையத்தில் தொடங்குவதற்கான படிப் படியான வழிகாட்டுதல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

கேஒய்சி

எஸ்ஐபி எனப்படும் பரஸ்பர நிதி முதலீடு திட்டத்தில் இணையக் கேஒய்சி எனப்படும் நிறுவனங்கள் கேட்கும் "உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்" என்ற ஆவணங்களைப் பதிவேற்றுவது அவசியமானது ஆகும்.

தேவையான ஆவணங்கள்

எஸ்ஐபி முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்குவதற்கு நீங்கள் கேஒய்சி ஆவணங்களான அடையாளச் சான்று, முகவரிச் சான்று ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும். இருந்தாலும் நிதி நிறுவனங்கள் ஐபிவி எனப்படும் ஒரு நபரை நேரடியாகச் சரிபார்க்கும் முறையிலும் உங்கள் இருப்பைச் சோதனை இடுகிறார்கள்.

எஸ்ஐபி தொகையின் விவரங்கள்

பாஸ்போர்ட் அளவுப் புகைப்படம், உங்கள் எஸ்ஐபி பணம் செலுத்தும் முறையைப் பொறுத்து, மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் கழிக்கப்பட வேண்டிய எஸ்ஐபி தொகையின் விவரங்களை வழங்குவதற்கு ஒரு காசோலைப் புத்தகம் ஆகியன தேவைப்படும் இதர ஆவணங்களாகும்.
கேஒய்சி செயல்முறையை நிறைவு செய்யவும், அவசியமான ஆவணங்கள் மற்றும் விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கும், மின்னஞ்சல் கேஒய்சி வசதியைப் பெற ஏதேனும் ஒரு நிதி நிறுவன இணையத் தளத்திற்கு வருகை தாருங்கள்.

கேஒய்சி நிதி நிறுவனங்களுக்கு மதிப்புடையது

ஒரு இணையத் தளத்தில் செய்யப்படும் கேஒய்சி ஆவணங்கள் பதிவேற்றமானது, அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மின்னஞ்சல் கேஒய்சி ஐ பெற நீங்கள் பணப் பரிமாற்ற முகவர்கள் அல்லது பதிவாளரின் இணையத் தளத்தை அணுகலாம்.

கேஒய்சி ஆவணங்கள் செயல்முறை

இந்தக் கேஒய்சி ஆவணங்கள் செயல்முறையில் உங்கள் முகவரி மற்றும் அடையாளச் சான்றின் மென் நகலைப் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும். கேஒய்சி செயல்முறைக்கு நீங்கள் ஆதார் எண்ணையும் சமர்ப்பிக்கலாம். இது வீடியோ சரிபார்ப்பிற்காக ஐவிஆர்ஐ செய்யும், மேலும் அடிப்படை விவரங்கள் அடங்கிய முன்கூட்டி நிரப்பப்பட்ட ஒரு படிவத்தையும் வழங்கும்.

இறுதிப் படி

நிதி நிறுவன இணையத் தளத்தில் முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்க இறுதிப் படி நிலை
அவசியமான கேஒய்சி ஆவணங்கள் செயல்முறைகளை முடித்து நீங்கள் எஸ்ஐபி முதலீட்டை செய்யத் தேர்ந்தெடுத்துள்ள நிதி நிறுவன இணையத் தளத்திற்கு வருகை தாருங்கள். பிறகு, அங்கே ஒரு புதிய முதலீட்டாளராக உங்கள் விவரங்களை உள்ளிடலாம். இணையத்தில் பணப் பரிமாற்றம் செய்ய, நிதி நிறுவன இணையத் தளமானது உங்களை உள் நுழைவு ஆதாரச் சான்றுகளை வழங்குமாறு கேட்கும்.

வங்கி விவரங்கள்தானியங்கிக் கடன் கழித்தல் மற்றும் திரும்பப் பெறுதல் அம்சங்களுக்காக மேற்கொண்டு வங்கி விவரங்களை வழங்க வேண்டியது அவசியமாகும். பிறகு, நிறுவனம், எஸ்ஐபி செயல்முறையில் பணம் கழிக்கப்படுவதற்கு ஒரு பொருத்தமான தேதியைக் கேட்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒரு மாத காலத்தில் உங்கள் எஸ்ஐபி முதலீடு தொடங்கப்படும்.